மது பாட்டில்களை கள்ள சந்தையில் விற்பனை செய்த மூதாட்டி கைது.

கோவை மே 28 கோவை கெம்பட்டி காலனி எல்.ஜி தோட்டம் ,முத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி முருகாத்தாள் (வயது 65) இவர் மது பாட்டில்களை வாங்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கடைவீதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நேற்று மாலை கெம்பட்டி காலனி, ராமர் கோவில் மார்க்கெட் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது முருகாத்தாள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில்அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.