கோவை ஜூன் 5 கோவை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தைசேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 78 ) இவர் நேற்று இடையர்பாளையம் – வடவள்ளி ரோட்டில் சைக்கிள் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜீப் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக ஜீப் ஒட்டி வந்த வடவள்ளி மகாராணி அவென்யூவை சேர்ந்த விஜய வெங்கடசாமி ( வயது 42) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைக்கிள் மீது ஜீப் மோதி முதியவர் உயிரிழப்பு .








