போக்சோவில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை மாவட்டம்பொள்ளாச்சி அருகே இந்த ஆண்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாறன்(வயது 58) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவில் எதிரி மாறனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை வழக்கு பதிவு செய்யப்பட்ட 7 மாதங்களில் சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல்நிலைக் பெண் காவலர் மஞ்சுளா தேவிஆகியோரைகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்..கார்த்திகேயன், பாராட்டினார்.