எடப்பாடி நடவடிக்கையை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்கிறார்- ஓபிஎஸ்..!

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் பதவி ஏற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பழனிச்சாமி தரப்பு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். தொண்டர்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாகவும், என்னை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு பழனிசாமிக்கோ, கேபி முனிசாமிக்கோஒ எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஒரு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவி ஏற்றவுடன் ஜனநாயக முறைப்படி இயங்குகிற ஒரே கட்சி அதிமுக என்றும் சில எட்டப்பர்கள் கழகத்திற்கு துரோகம் செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.