சீனாவில் 2025 மே 16ஆம் தேதியான இன்று அதிகாலையில் நிலநடுக்கம் (China Earthquake) ஏற்பட்டுள்ளது.
4.6 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், மினயான்மரில் லேசாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் தான் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது மியான்மரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பீதியடைய வைத்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “2025 மே 16ஆம் தேதி அதிகாலை 6.29 மணிக்கு சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. யுன்னானின் பாவோஷானில் இருந்து 32 கி.மீ தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மியாமரிலும் உணரப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது குறித்து எந்த விவரமும் வெளியாகிவில்லை. தற்போதை நிலவரப்படி, யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், மியான்மரில் ஏற்பட்ட லேசான நில அதிர்வாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிகிறது. அண்மையில் தான், மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஒட்டுமொத்த நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மியான்மரில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் அனைத்து நொறுங்கி தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்கள் தங்கள் உறவினர்கள், குடும்பங்களை இழந்து தவித்தனர். மேலும், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்திலும் பாதிக்கப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த மோசனமான நிகழ்வு நடந்த இரண்டு மாதத்திலேயே, தற்போது மியன்மரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னனதாக, 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுளளது. துருக்கியில் பிற்பகல் 3.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குளுவிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.