செங்கோட்டையன் ஒரு மூத்த அரசியல்வாதி!துரை வைகோ எம் பி!

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை செங்கோட்டையன் அண்ணா சமாதிக்கு அழைத்துச் சென்றது நல்ல விஷயமாக பார்க்கிறேன். -திருச்சியில் துரை வைகோ எம் பி பேட்டி.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ எம்பி பேசும்போது,திருச்சி பால்பண்ணை சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் பால்பண்ணை சர்வீஸ் சாலை பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விரைவில் அங்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படும்.திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு மாற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது அந்த குப்பைகளை பயோமெட்ரிக் முறையில் மாற்றி அகற்ற வேண்டும் என்ற தொழில்நுட்பம் இருந்து வருகிறது இருப்பிடம் அரியமங்கலம் குப்பை கிடங்கை அங்கிருந்து அகற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படுகிறது குடியிருப்புகளும் அதிகமாகி உள்ளது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் அதற்கான நல்ல தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.

திருச்சி தெப்பக்குளம் தரைக்கடைகள் அகற்றப்பட்ட விஷயம் தொடர்பாக வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடைய நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வு காண்பார்.செங்கோட்டையன் ஒரு மூத்த அரசியல்வாதி அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தில் இருந்து TVK சென்றுள்ளார். TVK வில் எப்படி செயல்படுகிறார் TVK புதிய இயக்கம். செங்கோட்டையனுக்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் கொடுத்து அவரை செயல்பட வைக்கிறார்கள் என்பது போக போக தான் தெரியும்.

அண்ணா சமாதியில் TVK நிர்வாகிகள் மரியாதை செய்தது குறித்த கேள்விக்கு,அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை அரசியல் இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட மக்களுக்காக உழைத்தவர். பெரியார் அண்ணா இல்லை என்றால் தமிழகம் கிடையாது. இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருக்க காரணம் பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் தான் காரணம் செங்கோட்டையன் அந்த இயக்கத்தில் சேர்ந்து அண்ணாவின் சமாதிக்கு அழைத்து சென்றது நல்ல விஷயமாக பார்க்கிறேன்.