குடிபோதையில் எஸ்டேட் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சோலையார் டேம், கல்யாண பந்தல் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர். கண்டி
முண்டா ( வயது 23) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவியுடன் தேயிலை தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி இருந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் மனம் உடைந்த கண்டி முண்டா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது மனைவி சுகனஒரன்சவஷேக்கல் முடி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..