குடிபோதையில் சாக்கடை கால்வாயில் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி..

கோவை புலியகுளம், தாமு நகர்,நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சக்தி முருகன் ( வயது 38)ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உடையவர்.மதுப்பழக்கத்தை மறப்பதற்காக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று காலையில்வெளியே சென்றஅவர் வீடு திரும்பவில்லை.செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.தேடிப் பார்த்தபோது சவுரிபாளையத்தில் உள்ள சாக்கடைகால் வாயில் சக்திவேல் முருகன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவரது மனைவி சித்ரா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.