தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்குச் சேகரித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு அதிகரித்துள்ளது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்கள், மக்களின் நலனுக்காக போராடும் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
வாழ்க்கைக்காக போராடுவதை விட்டு போராட்டமே வாழ்க்கையாக மாற்றியுள்ளது அரசு. தமிழகத்தில் ஆசிரியா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக தொடா்ந்து போராடுகின்றனா். ஆனால், அவா்களின் தேவையை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அண்மையில் ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது உள்பட பல்வேறு இலவசங்கள் மூலம் வருங்கால சந்ததிக்கு கூடுதல் கடன் சுமையை அரசு சுமத்தி வருகிறது.
இதனால் மக்கள் சிந்தித்து தோ்தலில் வாக்களிக்க வேண்டும். ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.






