கோவை அருகே உள்ள தீத்திப்பளையதைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 43 )இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார் .நேற்று இவர் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனது வேனில் ஓடுகள் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர் குடிபோதையில் இவரது சரக்கு வேனை முந்தி சென்று வழிமறித்தனர். 3 பேரும் சுடலைமுத்துவை தலை, முகத்தில் சரமாரியாக தாக்கினார்கள் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பிடித்து கீழே தள்ளி விட்டு காரில் தப்பி சென்று விட்டனர் படுகாயம் அடைந்த சுடலைமுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு வழக்கு பதிவு செய்து காரில் தப்பிய 3பேரை தேடி வருகிறார்.
நடு ரோட்டில் வேன் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்..!
