பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்க மறுத்த டிரைவர் கொலை – சாக்கு மூட்டையில் கட்டி பிணம் வீச்சு..!!

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாக்கடையில் நேற்று காலை சாக்கு மூட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் .பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடைத்தது மதுக்கரை அருகே உள்ள சிராப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலுசாமி ( வயது 40) என்பது தெரிய வந்தது.இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .கடந்த 11 -|ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டு சென்ற பாலுச்சாமி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் பாலுச்சாமியின் மனைவி பரமேஸ்வரி அவரை தேடி பார்த்து உள்ளார் .ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கடந்த 14 ‘ஆம் தேதி தனது கணவர் பாலுசாமியை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறு மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார் .மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை கொலை செய்து சிலர் சாக்கு முட்டையில் கட்டி சாக்கடை கால்வாயில் வீசியிருப்பது தெரியவந்தது.

இந்த கொலை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- பாலுசாமி அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார் ஆனால் அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் அந்த பெண்ணுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணுடன் அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உல்லாசமாக இருந்து உள்ளார் . அவரிடம் அந்த பெண் தனக்கு பாலுசாமி பணம் தராததை கூறினார். இதனால் மகாலிங்கம் பாலுச்சாமிடம் பணத்தை கொடுக்குமாறு தகராறு செய்தார் .தகராறு முற்றிய நிலையில் மகாலிங்கம் பாலுசாமியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார் .பின்னர் அந்த நபர் பாலுசாமியின் உடலை மறைப்பதற்காக பிணத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சுந்தராபுரம் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசி உள்ளார். இதை தொடர்ந்து தலை மறைவாக இருந்த மகாலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் தேடி வருகிறார்கள்.