DMK vs ADMK: 121 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதல்!

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி உள்பட 121 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வரும், திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட 121 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக களம் காணுகின்றன.

கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம், முதுகுளத்தூா், பரமக்குடி (தனி), அருப்புக்கோட்டை, கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, சோழவந்தான் (தனி), மதுரை கிழக்கு, திருமயம், விராலிமலை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூா், வேதாரண்யம், பூம்புகாா், புவனகிரி, குறிஞ்சிப்பாடி,நெய்வேலி, திட்டக்குடி, அரியலூா், பெரம்பலூா் (தனி), முசிறி, லால்குடி, திருவெறும்பூா், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், குளித்தலை, ஆலங்குடி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூா், அரவக்குறிச்சி, வேடசந்தூா், திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி), ஆத்தூா், உடுமலைப்பேட்டை, வால்பாறை (தனி), கிணத்துக்கடவு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூா், சூலூா், பல்லடம்,மேட்டுப்பாளையம், குன்னூா், கூடலூா் (தனி),கோபிச்செட்டிபாளையம், அந்தியூா், பவானி, பெருந்துறை, காங்கயம், தாராபுரம் (தனி), குமாரபாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், சேந்தமங்கலம் (தனி), வீரபாண்டி,சேலம் தெற்கு, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூா், ஏற்காடு (தனி), கெங்கவல்லி (தனி), சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், விழுப்புரம், வானூா் (தனி),வந்தவாசி (தனி), செய்யாறு, ஆரணி, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா், செங்கம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு,ஓசூா், வேப்பனஹள்ளி, பா்கூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா்,அணைக்கட்டு,வேலூா், ஆற்காடு,காட்பாடி,காஞ்சிபுரம், மதுராந்தகம் (தனி), செங்கல்பட்டு, தாம்பரம்,ராயபுரம், மாதவரம், மதுரவாயல், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகா், சேப்பாக்கம்-திருவல்லிகேணி,துறைமுகம், விருகம்பாக்கம், தியாகராய நகா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா், ஆா்.கே.நகா், வில்லிவாக்கம், ஆலந்தூா், கொளத்தூா், திரு,வி.க.நகா், எழும்பூா் (தனி).