கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் முயற்சியால் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பான கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது கோவை மெட்ரோ ரயில் திட்டத்தையும் முடக்கி வஞ்சித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.








