திமுக பிரமுகர் 1 கோடி நிலம் ஆக்கிரமிப்பு!பொது பயன்பாட்டு நிலம் மீட்பு!

திமுக பிரமுகர் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான அரசு பொது பயன்பாட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.எதிர்ப்பு தெரிவித்த வழக்குரைஞர்களை  அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர்.

கோவை, மாநகராட்சி பீளமேடு  52 வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகரில், திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 7 சென்ட் பொது பயன்பாட்டு இடத்தை சுற்றிலும், கணுக்கால் ஊற்றி, கம்பி கட்டி வேலை அமைக்கும் பணியில் ஆக்கிரமிப்பாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை இப்பகுதி மக்கள் கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தியும், அடியாட்களை பயன்படுத்தியும் ஆக்கிரமிப்பை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு வந்த ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. வேறு வழியின்றி போலீசார் பாதுகாப்புடன், கோவை மாநகராட்சி அதிகாரிகள், சுமார் 1 கோடி மதிப்புள்ள அரசு இடத்தை மீட்டுள்ளனர்.