கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ” ஸ்மாட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார்.
இவர்கள் நேற்று அதிகாலையில் அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கரியாம்பாளையம் அருகில் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக இருசக்கர வாகனம் சந்தேகத்திற்குரிய வகையில் சென்றதால் அந்த வாகனத்தை விரட்டி பிடித்து அந்த நபரை விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை செய்ததில் மேற்படி நபர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகேசன் (வயது 36) என்பதும், கோவை ஆவாராம்பாளையத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் மேற்படி நபரை கோவை மாநகர காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இரவு ரோந்து பணியில் திறம்பட செயல்பட்டு திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை மடக்கி பிடித்த ரோந்து போலீஸ் ஏட்டு கோவிந்தராஜ் போலீஸ்காரர் காவலர் தாமோதரன் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்..
இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளியை மடக்கி பிடித்த மாவட்ட எஸ்.பி.யின் ” ஸ்மார்ட் காக்கிஸ்” தனிபடை.!!





