கிடு கிடுவென உயர்ந்தது டீசல் விலை

ரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நள்ளிரவில் வெளியான இந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை 42.7 சதவீதமும், டீசல் விலை 54.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 458.41 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 520.35 ரூபாயாகவும் விண்ணை முட்டியுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வால் அதிர்ச்சியடைந்த மக்கள் பெட்ரோல் நிலையங்களில் அலைமோதியதுடன், நாடு முழுவதும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இந்த நிதிச் சுமையைக் குறைக்க பாகிஸ்தான் அரசு சில அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் அடுத்த 30 நாட்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு விவசாயிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்குத் தேவையான மானியங்களை வழங்க மாகாண அரசுகள் முன்வந்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தணிந்து நிலைமை சீரடைந்தவுடன், பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என அந்நாட்டு ஆட்சியாளர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும், விமான எரிபொருள் விலை உயர்வால் வியட்நாம் போன்ற நாடுகள் விமானப் பயணங்களையே நிறுத்தியுள்ளது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தீவிரத்தைக் காட்டுகிறது.