தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்களது நேரடி உயர் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் படிநிலை முறையை மீறக் கூடாது எனவும் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்மையில் பொறுப்பேற்ற இவர், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு, முக்கியத் தலைவர்கள் பிரச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இனிவரும் காலங்களில், தங்களுக்கு மேலதிகாரிகளாக இல்லாத மற்ற அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இத்தகைய விதிமீறல்கள் அல்லது அதிகார வரம்பு மீறல்கள் ஏதேனும் நடந்தால், அதனை உடனடியாகத் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் – ஒழுங்கு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து உடனடியாகத் தனக்கும், தங்களது மேலதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள டிஜிபி, நேரமின்மை அல்லது இணையத் தொடர்புப் பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில், குறுஞ்செய்தி வாயிலாக தகவலைத் தெரிவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு குறித்து காணொலி மூலம் மண்டல வாரியாக ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.