காசி திருக்கல்யாண திருவிழாவில் பங்கேற்க சூலூரில் இருந்து பக்தர்கள் ஆன்மீக பயணம்..!

சூலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 650 பேர் காசியில் வரும் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள
ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ விசாலாட்சி திருக்கல்யாண திருவிழா மற்றும் 1008 மஹா கும்ப தீர்த்த அபிஷேக விழாவில் பங்கேற்கவும், தேங்காய் தொட்டியில் அரைத்து செய்யப்பட்ட கங்கையில் ஆற்றில் விளக்கேற்றி விடும் பக்தர்களுக்கு வழங்க ஒரு கோடி பசுமை தட்டங்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் அயோத்தி, அலகாபாத், காசி, கயா, புத்தகயா என பசுமை யாத்திரா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணமும் மேற்கொள்கின்றனர். அதற்காக அவர்கள் கோயமுத்தூர் வடகோவை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கினர். அதில்
முன்னாள் அமைச்சர், கோயமுத்தூர் மேயர் முனைவர் செ. ம.வேலுசாமி முன்னின்று ஆன்மீக பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பயணத்தை முன்னின்று அழைத்துச் செல்கின்ற ஐக்கிய நாடு சபை உறுப்பினர் நித்தியானந்தம், சாந்தி செல்வராஜ், சிறைத்துறை அண்ணாதுரை உள்ளிட்ட ரயில்வே ஊழியர் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை கூறி வழி அனுப்பி வைத்தார். சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தியநாத பெருமாள் திருக்கோவில் குருக்கள் பூஜையுடன் பசுமை பயணம் மேற்கொள்பவர்களை வழி அனுப்பி வைக்க வந்த ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்