இப்படி உலக நாடுகளில் மிரட்டுவது ஒருபக்கம் எனில், ஒருபக்கம் எண்ணெய் வளம் மிக்க நாடுகளை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கி டிரம்ப் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் வெனிசுலா அதிபரை சிறை பிடித்து சிறையில் அடைத்தார். வெனிசுலாவில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதால் அதை கைப்பற்றவே இந்த சம்பவத்திற்கு பின்னணி என சொல்லப்பட்டது.
அதேபோல் டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்து தீவை நாங்கள் கைப்பற்றுவோம் அல்லது விலைக்கு வாங்குவோம் என டிரம்ப் கூறினார். சொல்லியிருந்தார். இதற்கு ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் நாங்கள் கிரீன்லாந்தை எடுத்துக்கொள்ளவில்லை எனில் ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றி விடுவார்கள் என டிரம்ப் சொன்னார்.
இந்நிலையில் இந்த கருத்தை மறுத்துள்ள ரஷ்ய அதிபர் புதின் ‘கிரீன்லாந்து டென்மார்க்குக்கே சொந்தம்.. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.





