டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 13ம் தேதி அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக இருவரும் உறுதியளித்ததை அடுத்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சவுரவ் மற்றும் அசுதோஷ் இருவரும் விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர். இதனை தொடர்ந்து இருவருக்கும்போலீசார் மீண்டும் புதிய சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.







