கோவை : கல்லூரி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட “போலீஸ் புரோ” திட்டத்தை பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கல்லூரிகளில் போலீஸ் புரோ திட்டம் தொடங்கப்பட்டதால் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .இது மிகவும் உதவியாக இருந்தது அத்துடன் மாணவர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர் .இந்த திட்டம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தை பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் செயல்படுத்தும் போது மாணவர்களை சந்தித்து அவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதனால் அவர்களிடமும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..