Dating Appல் இளம்பெண்னிடம் மோசடி.DSP மகன் கைது!

டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம் பெண்ணிடம் நகை, பணம், பறித்த டிஎஸ்பி மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல், ரகசியமாக அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஜாமீன் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.

பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பில் என்ற டேட்டிங் ஆப் மூலம், தருண் என்ற நபர் பழகியுள்ளார். அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்று, மற்றொரு நண்பருடன் சேர்ந்து மிரட்டி மோதிரம், பிரேஸ்லெட், செயின் ஆகியவற்றை பரித்துள்ளனர். அப்பெண் ஏடிஎம் கார்டில் வைத்திருந்த 90 ஆயிரம் பணத்தையும், ஜிபி மூலமாக பண பரிமாற்றம் செய்து அபகரித்துள்ளனர்.

இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன் பதிவுகள் மற்றும் பண பரிமாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறை, தருண் ஈச்சனாரி பகுதியில் ஹோட்டல் ஒன்று நடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. அதில் போதிய வருமானம் கிடைக்காததால், பம்பில் டேட்டிங் ஆப் மூலம் பல இளம் பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

தருண் திண்டுக்கல்லில் டிஎஸ்பியாக பணிபுரியும் தங்கப்பாண்டியன் என்பவரது மகன் என தெரியவந்தது. தருண் கைது செய்த கோவை போலீசார், ரகசியமாக அழைத்து வந்து மகளிர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, ஜாமீன் பெற்று கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். டி எஸ் பி மகன் என்பதால் பத்திரிகை மற்றும் டிவியில் செய்தி வராதபடி காவல்துறையினர் மிக கவனமாக செயல்பட்டுள்ளனர்.

தருண் சாதாரண குடும்பப் பெண்கள் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து, டேட்டிங் ஆப்பில் நயமாக பழகி, பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்ப சூழ்நிலை மற்றும் அவமானம் கருதி பல பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை. தனுஷ் ஆல் ஏமாற்றப்பட்ட பெண்கள் யார் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.