மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல்… காட்டுப்பாக்கத்தில் அதிக மழை-வானிலை மைய இயக்குனர் தகவல்..!

மாண்டஸ் புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ‘ மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இது தொடர்ந்து வலுவிழந்து கொண்டிருக்கிறது. இன்று காலை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின் தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இது வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும். இதன் காரணமாக தற்போது கிடைத்த நிலவரப்படி. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ, வில்லிவாக்கத்தில் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, காஞ்சிபுரம் 7 செ.மீ , பள்ளிக்கரணை 7, நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் புயல் கரையை கடந்தபோது காற்றின் வேகம் 70 கிலோமீட்டர் என்று பதிவாகி உள்ளது. இதனால் வட உள்மாவட்டங்களில் மழை இருக்கும். ‘ என்று அவர் தெரிவித்துள்ளார்.