சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை..!

கோவை திருச்சி ரோட்டில் உள்ள சி. எஸ். ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில்வருடாந்திர ஸ்தோஸ்திர பண்டிகை நேற்று நடந்தது..இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.ஆலய வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், உணவு அங்காடி அமைக்கப்பட்டிருந்தன..இதில் பல்வேறு விதமான பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.அருண் ஆனந்தராஜ் குடும்பத்தினர் விற்பனையை தொடங்கி வைத்தனர்.ஆலயத்துக்கு வந்தவர்கள்.தாங்கள் கொண்டு வந்த பொருட்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஆலய பாதிரியார்கள் ராஜேந்திரன் ,சற்குணம் , சுரேஷ், செயலாளர் ஜெ.பி. ஜேக்கப், பொருளாளர் ஜெ ஏ. பரமானந்தம். .ஜெபகிங் ஆல்வின்,ஸ்டீபன், ஜேக்கப், ஹெரால்டு, காட் வின் ,,ஆடம் அப்பாதுரை, ஆகியோர் பங்கேற்றனர்.