சி.ஆர்.பி.எப். சப் – இன்ஸ்பெக்டர் தற்கொலை..

கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ஆயுதப்படை (சி . ஆர்.பி.எப்) பயிற்சி முகாம் உள்ளது.இங்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகவான் சர்மா ( வயது 50) என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் காலையில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. உடனே சக அதிகாரிகள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போன் எடுத்து பேசவில்லை. உடனே அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோது உள்ளே அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பகவான் சர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.