கோவை போத்தனூர் சாய் நகர், ரயில்வே காலனி சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 52) இவரிடம் சாய்பாபா காலனி என்.எஸ் ஆர்.ரோட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் அவரது மனைவி மைதிலி ஆகியோர் துடியலூரில் தாங்கள் “பிளாட் “போட்டு விற்பனை செய்வதாகவும், 12 சென்ட் இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறினார்கள். இதை நம்பி ஷாஜகான் அந்த தம்பதியிடம் 2022-ம் ஆண்டு முதல் தவணையாக ரூ.8 லட்சமும், பிறகு ரூ 12 லட்சம் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட தம்பதி ஷாஜகானுக்கு இடத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் இது தொடர்பாக ஸ்ரீகாந்த் அவரது மனைவி மைதிலி ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..
நிலம் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி – தம்பதிக்கு வலைவீச்சு.!!
