கோவை :கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் பலியானார்கள் அல்லவா? இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடந்து வருகிறது.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 6 சப் டிவிஷன் ( உட்கோட்டங்கள்) உள்ளன .ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு டி .எஸ் . பி . தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு நேற்று முதல் தீவிர சோதனை நடந்து வருகிறது. இன்று காலை வரை நடந்த சோதனையில் 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 98 பேர் கைது செய்யப்பட்டனர் .1092 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . 23 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் கலப்பட மதுவா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது . இவ்வாறு அவர் கூறினார்..