மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… கேரளாவில் அதிகரித்த பாதிப்பு.!!

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, மே 26 நேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கொரனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கும் தமிழ்நாட்டில் 69 பேருக்கும் கொரனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கொரனோ பாதிப்பு காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வீரியம் குறைந்த கொரோனா பரவல் என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.