உச்சத்தை தொட்ட கொரோனா.. வரலாற்றிலேயே முதல் முறையாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் சீனா..!

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறதாம்.

ஒட்டுமொத்த உலக நாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக பேரழிவுக்கு தள்ளிவிட்டது கொரோனா வைரஸ். 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது இந்த கொரோனா வைரஸ். பல லட்சம் மக்களை காவு கொண்ட இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைவாக இருந்தது.

தற்போது சீனாவில் மீண்டும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. அதுவும் ஒரே நேரத்தில் பலருக்கும் பரவக் கூடிய உருமாறிய கொரோனா வைரஸ்தான் தற்போதைய பரவலுக்கு காரணம் என கண்டறியபப்ட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

சீனாவில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன. சீனாவின் மயானங்களில் சடலங்கள் கொத்து கொத்தாக தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா தடுப்பூசி போட விரும்புவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாம். ஆனால் சீனாவின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லையாம். இதனையடுத்து அதனது சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இருக்கிறதாம் சீனா. ஜெர்மனியில் இருந்து முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யப் போகிறதாம் சீனா. சீனாவில் 20,000 ஜெர்மனியர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.