கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்ட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் 25 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈ.டுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதணால் 4வது நாளான இன்றும் கூட்டுறவு வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் அங்காடிகள் பூட்டிக்கிடக்கும் நிலையில் பயிர் கடன் நகை கடன் உள்ளிட்ட சேவைகள் முடங்கி உள்ளது . இது இது தொடர்பாக ஒன்றிய துணைத் தலைவர் மாவட்ட போராட்ட குழு தலைவர் ஆன பால்ராஜ் ஒன்றிய செயலாளர் மாவட்ட இணை செயலாளருமான ராகவன் ஆகியோர் கூறுகையில் 20 சதவித ஊதிய உயர்வை அனைவருக்கும் நிபந்தனை இன்றி வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்கள் வராததால் வங்கிகள் பூட்டப்பபட்டு சேவை பாதிக்கப்பட்டுள்ளது .ஆகவே அதிகாரிகள் போராட்டக்காரர்களை அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினர்.
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்..!
