தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு : நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை..!

சிவகங்கை: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஷ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் விக்னேஷ்வரனுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது விக்னேஷ்வரன் வீட்டில் இருந்த பிரபாகரன் தொடர்பான புத்தகங்கள், புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.