கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் ,அதனை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறினார்.சில MP, MLA களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அதே வேளையில் ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளி விடுவார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவு எடுக்கும் என்ற அவர், எங்களுடையது ஜனநாயக கட்சி என்பதால் யார் என்ன கோரிக்கை வேண்டுமானாலும் வைக்கலாம் என குறிப்பிட்டார்.
மேலும் நான் சினிமாவில் இல்லை அதை தெளிவு படுத்திக் கொள்கிறேன் என்றும் ,தவெக தலைவர் விஜயை சந்தித்தேன், அதை தாண்டி எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.,விஜய் சந்தித்தது போல டெல்லியில் பலரையும் நான் சந்திக்கிறேன். பிரவீன் சக்கரவர்த்திக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பது மட்டும் தான் அடையாளமா..? வேறு அடையாளங்களே இல்லையா… ?என்றும் தனிப்பட்ட முறையில் இரு நபர்கள் சந்திக்க கூடாதா ? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிதாக இதை கேட்கிறீர்கள் ?? என்றும் வினவினார்.
இதேபோல் தவெக தலைவர் விஜய்க்கு களத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை நேரடியாகவே காண முடிவதாகவும், அது ஓட்டாக மாறுமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர் எனகூறிய அவர்,விஜயை மக்கள் நடிகராக பார்க்க வரவில்லை, அரசியல்வாதியாக தான் பார்க்க வருகிறார்கள் என குறிப்பிட்டார். விஜய் ஒரு சக்திதான் அதனை யாரும் மறுக்க முடியாது என்றும், தமிழ்நாட்டில் விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவாகி விட்டார் என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.









