கோவை மாவட்டம் பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை மலைப்பாதையில் நேற்று முன்தினம் மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை மூன்று நாட்களுக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு அரசு பேருந்து சேவைகள் உட்பட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தம் செய்யப்பட்டு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார் அதன் படி இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 25 ஆம் தேதி இரவு வால்பாறை அட்டகட்டி பகுதியில் உள்ள 12 மற்றும் 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இச்சம்பவத்தைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பாறையை சாலையிலிருந்து அப்புறப் படுத்தியுள்ளனர் எனவே அவசரகால வாகனங்கள் சென்றாலும் மிகவும் கவனமுடன் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வால்பாறையில் பரபரப்பு: கொண்டை ஊசி வளைவில் விழுந்த ராட்சதப் பாறை!





