கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர், அப்பாஸ் கார்டனை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மகள் ஜோசிகா (வயது 19 )இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தாயார் பாரதி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக் டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
கல்லூரி மாணவி திடீர் மாயம்..!





