தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி பரிதாப பலி – பஸ் டிரைவர் சஸ்பெண்ட்.!

கோவை : கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிணி ( வயது 19 )இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி யிருந்து 2 -ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டு கடந்த 21-ஆம் தேதி கோவை காந்திபுரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது வாளையார் பகுதியில் இருந்து காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வேகமாக வந்த அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் மாணவிஹரிணி மற்றும் கோவை சேர்ந்த சுந்தர்ராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் மாணவி ஹரிணி அதே இடத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துபஸ்சை வேகமாக ஓட்டிய டிரைவர் மார்ட்டினை ( வயது 47) கைது செய்தனர். இந்த நிலையில் பஸ்சை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுங்கம் – 2 கிளையை சேர்ந்த டிரைவர் மார்ட்டின் பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்..