நீலகிரி மாவட்டம் ,மஞ்சூர் குந்தா,கரியமலையை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் ஸ்ரீ சுந்தர்தன்வயது 19 இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் ( சி . ஏ ) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.துடியலூர் பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீரங்க கார்டனில் உள்ள ஒரு வீட்டில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த அறையின்கதவு உள்பக்கம் தாழ் போட்டு கொண்டு மின்விசிறியில்சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து அவரது தந்தை வடிவேல் துடியலூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தற்கொலைக்கானகாரணம் தெரியவில்லை ,இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர் தற்கொலை..





