கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவையில் கடந்த நவம்பர் மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும், கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இந்த வழக்கில் கருப்பசாமி , கார்த்திக் , தவசி ஆகிய மூவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் நடைமுறை விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன.இதனை அடுத்து, மேலதிக விசாரணைக்காக வழக்கு வரும் ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.








