2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடர் கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தவெக ஆட்சியின் 100 நாள சாதனையை பாராட்டி பேசினார். இதனைத்தொடர்ந்து, திமுக கொறடா எ.வ.வேலு, கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த தீரமானத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை சம்பவம் கோஷ்டி போதல் அல்ல. கோவை செட்டிபாளையம் போலீசார் மாணவனை விசாரணைக்கு வரச் சொல்லி, போதை கும்பல் பற்றிய தகவலை மாணவரிடமிருந்து வாங்கியுள்ளனர், மாணவன் கொடுத்த தகவலை குற்றவாளிகளிடம் காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர். இதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது; இதைத்தான் அமுதனின் பெற்றோரும் சொல்லியிருக்கிறார்கள். அரசின் அலட்சியத்தாலும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கும் தான் இந்த கொலைக்கு காரணம்.
சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி மாணவன் தனுஷ், போதை கும்பலைத் தட்டிக் கேட்டதால் 30 பேர் கொண்ட கும்பல் தனுஷைக் கொ*ல செய்துள்ளனர். இந்த அரசு போதைப்பொருள் தடுப்புப் படையை உருவாக்கியதாகச் சொல்றாங்க, அதற்குப் பல கோடி ரூபாயில் விளம்பரமும் பண்ணிருக்காங்க. ஆனால், களத்தில் நடப்பது வேறு மாதிரியாக இருக்கிறது’ இவ்வாறு அவர் பேசினார்.’ இவ்வாறு அவர் பேசினார்.







