கோவை போலீஸ்காரர் தற்கொலை..

கோவை : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் அசன் முகமது ( வயது 34) இவர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி தஸ்லீமா நஸ்ரின் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அசன் முகமது விடுமுறையில் கீரனூர் சென்றிருந்தார். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் அசன் முகமது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.