கோலாகலமாக நடந்தது கோவை கோனியம்மன் தேரோட்டம்

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. தேர்த்திருவிழாவையொட்டி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றன. மேலும் அம்மன் ஒவ்வொரு நாளும் புலி வாகனம், கிளி வாகனம் ,சிம்ம வாகனம் ( அன்ன வாகனம் காமதேனு வாகனம் ,வெள்ளை யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும்பக்தர்கள் அங்குள்ள அக்னி கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதை ஒட்டி காலை 7 மணிக்கு உற்சவ அபிஷேகம், அலங்கார பூஜை, நடந்தது பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதி அருகே அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்றது .அம்மன் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் திருக்கல்யாணநிகழ்ச்சியை நடத்தி வைத்தனர் .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட அம்மனை வழிபட்டனர். பெண்களுக்கு வளையல், குங்குமம் சந்தனம் மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. இரவில் அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மதியம் 2-05 மணிக்கு தொடங்கியது.அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மடாதிபதிகள்,ஆதீனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரைவடம் பிடித்து தொடங்கி வைத்தனர் .தேர் ராஜ வீதியில் உள்ள தேர்முட்டியில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பு கவுண்டர் வீதி வழியாக சென்று மீண்டும் தேர் நிலை திடலை சென்றடைந்தது.தேரோட்டத்தை காண சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்திருந்தனர்.பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.தேரோட்டத்தை அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் இருந்து போலீசார் கண்காணித்தரர்.மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தேரோட்டத்தை ஒட்டி அந்த பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தேர் செல்லும் வழியில் மின்சாரம்தடை செய்யப்பட்டிருந்தது. “மெட்டல் டிடெக்டர் “,துப்பறியும் நாய் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்,