இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் அலுவலக இட வசதி வழங்குநர்களில் ஒன்றான WorkEZ (Work Easy Space Solutions), கோயம்புத்தூரில் 1,00,000 சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலக இடத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய வசதி, கோயம்புத்தூரின் தகவல் தொழில்நுட்ப துறையின் மையமாக திகழும் சரவணம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இது, தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள், மற்றும் நிதியியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டம், சுமார் 1,00,000 சதுர அடி பரப்பளவில், 2025 நவம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த இடத்தின் 90%க்கும் அதிகமான பரப்பளவு, முன்னணி நிறுவனங்களான PWC (அமெரிக்கப் பிரிவு) உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அலுவலக இட வசதி சந்தையில், WorkEZ-க்கு இது ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
WorkEZ நிறுவனர் சுனில் ரெட்டி கூறுகையில், “வலுவான வாடிக்கையாளர் தளத்தின் ஆதரவோடு, நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் 45%க்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து வருகிறோம். எங்கள் சொத்துக்களில் சராசரியாக 90%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பி உள்ளன” என்றார். மேலும், 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியன் சதுர அடி இலக்கைத் தாண்டி, முக்கிய நகரங்களிலும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதாப் முரளி, “கோயம்புத்தூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மையமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று குறிப்பிட்டார். கோயம்புத்தூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.250 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்ட WorkEZ இலக்கு வைத்துள்ளது.
WorkEZ, தென்னிந்தியாவின் நம்பகமான அலுவலக இட வசதி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 1.2 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 12 மையங்களை நிர்வகித்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஃபோர்ச்சூன் 500 நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.