கோவை : சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள பெரிய கவுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இரவு இவர் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இவரது செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர் .இதுகுறித்து கோமதி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவை மருத்துவமனை பெண் ஊழியரிடம் செல்போன் பறிப்பு..!









