கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் வழங்கினார் இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) விஸ்வநாதன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகராட்சி துணைத்தலைவர் செந்தில் குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா,தாட்கோ பொதுமேலாளர் மகேஷ்வரி, வட்டாட்சியர் மோகன் பாபு, அரசு அலுவலர்கள் நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும் போது மக்கள் தொடர்பு முகாம் மூலம் பொதுமக்களின் தேவைகளை மனுக்களாகப்பெற்று அதனடிப்படையில் அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது என்றும் மலைகிராம பழங்குடியின மக்கள் காடுகளில் இருந்து சேகரித்து வரும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள் எனவே சந்தையில் அப்பொருட்களை விற்பனை செய்வதற்க்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வால்பாறை பகுதி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் அதற்காக பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கும், மாணவ மாணவியர் களுக்கும் தனது பாராட்டை தெரிவிப்பதாகவும் கூறினார் அதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பான சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரத்தை தொடங்கிவைத்தார் முன்னதாக 12 ஆம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்த அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிவன் ராஜை சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார் பின்பு சின்கோனா ரயான்டிவிசன் பகுதியில் கன்டெய்னர் ரேசன் கடையை திறந்து வைத்தார் அதைத்தொடர்ந்து படகு இல்லத்தை பார்வையிட்டார்
வால்பாறையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 3 கோடியே 56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் 171 பயனாளிகளுக்கு வழங்கினார்.
