கோவை ராமநாதபுரம்,சவுரிபாளையம், ஐயப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 18 ) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி ( தாவரவியல்) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணம் கட்டுவதற்கு போதிய வசதி நம்மிடம் இல்லை .எனவே அரசு கலைக் கல்லூரியில் இடம் எடுத்து விட்டேன் அந்த கல்லூரியில் நீ போய் சேர்ந்து கொள் என்று மகளிடம் தந்தை சதீஷ்குமார் கூறினாராம்.கல்லூரி மாற முடியாத மன வேதனையில் மாணவி ஸ்ரீஜா நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தந்தை சதீஷ்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..
