கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10-1கிலோமீட்டர் தூரம் வரை புதியமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவின் மிக நீளமான மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் அமைக்கும் பணி 2020-ம்ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் மொத்தம் 305 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம் என 4 இடங்களில் ஏறுதளங்கள், இறங்குதளங்கள் உள்ளது .இதன் சிறப்பு அம்சமாக ஹோப் காலேஜ் அருகே ரயில்வே மேம்பால பகுதியில் 52 மீட்டர் நீளம் கொண்ட இரும்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மற்ற பாலங்களைப் போல் கான்கிரீட் பீம் வைத்து கட்டப்படாமல் தனித்தனி ஆக சிறு சிறு தளங்களாக தயார் செய்யப்பட்டு வலுவான இரும்பு கம்பிகள் மூலம் இந்த தளங்கள் இணைக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் மூலம் கோவைஉப்பிலி பாளையத்திலிருந்து கோல்டுவின்ஸ் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வலுவாக கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் கனரக வாகனங்களும் செல்ல முடியும். இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் 120 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அலங்கார செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேம்பாலத்தில் 4 வழி சாலை அதன் கீழ் 6 வழிச்சாலை என மொத்தம் 10 வழிச்சாலையாக கோவை அவிநாசி ரோடு மாறிவிட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் கோவை அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.முதலமைச்சர் நேற்றுபாலத்தை திறந்ததும் பொதுமக்கள் கார்களிலும் ,இருசக்கர வாகனங்களிலும் சென்று அந்த பாலத்தில் மகிழ்ச்சி பயணம் செய்தனர். பாலத்தில் 4சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக செல்வதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அந்த பாலத்தில் வேக கட்டுப்பாடு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி இரவு 9 மணி முதல் காலை மணி வரை பாலம் அடைக்கப்பட்டுள்ளது.இதற்காக ரோட்டில் தடுப்பு வேலி வைக்கப்பட்டுள்ளது.
கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை அடைப்பு..!
