சேவல் சண்டை சூதாட்டம்..!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர்பகுதியில் நடிகர் விஜயகாந்த் தோட்டம்உள்ளது .இதன் அருகே பொங்கல் பண்டிகைக்காக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராவுத்தூர், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த சுரேந்தர் (வயது 36) பாரதி (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.