கோவைஅருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியில் ஒரு காலி இடத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. சிறப்பு – சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சீர நாயக்கன்பாளையம் சக்திவேல் (21) சொக்கம்புதூர் சூர்யா (22) சீரநாயக்கன்பாளையம் வினோத்குமார் (30) வீரகேரளம் சத்யா நகர் மகேந்திரன் (29)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட 2 சேவல்களும், ரூ. 6, 200 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..
சேவல் சண்டை சூதாட்டம்..!








