வரும் 16ம் தேதி மூடல்.!!

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மது கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ,தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மது கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், சுற்றுலாத்துறை மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்து மதுபான விற்பனைக் கூடங்களையும் திருவள்ளுவர் தினமான வருகிற 16-ம் தேதி (வியாழன்) அன்று மூட உத்தரவிடப்படுகிறது. அன்றைய தினம் விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மீதும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 -ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..