திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு குழந்தைகள் நடை விழிப்புணர்வு 2024 பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் துணை ஆட்சியர் அமித் குப்தா (பயிற்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் கங்காதரணி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தைகள் நல பேரணியை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி திருச்சி சேவா சங்கம் பள்ளியில் நிறைவடைந்தது.