ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு-பணியில் இல்லாத அதிகாரி சஸ்பெண்ட்..!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நேற்று முன் தினம் சென்னையிலிருந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இந்த ராணிப்பேட்டை ரூ. 118.40 கோடியில் பல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, அரசு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராணிப்பேட்டையில் நடைபெற உள்ள அரசு விழாவிற்கு செல்லும் வழியாக அரசு குழந்தைகள் நலம் மையத்தில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். சமூக நல துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் நலமாக குழந்தைகள் விடுதியில் பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இது எடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத குழந்தைகள் நலம் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.